ஆப்கானிஸ்தானில் சாலையோரம் குண்டுகள் வெடிப்பு: 5 பேர் பலி, பலர் படுகாயம்

Must read

காபூல்: ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டுகள் வெடித்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

அந்நாட்டின் மைதான் வார்தக் மாகாணத்தில் ஜல்ரெஜ் மாவட்டத்தில் சாலையோரம் இந்த குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில்,  5 பேர் பலியாக, 9 பேர் காயமடைந்து உள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்க வில்லை. குண்டுவெடிப்பு சம்பவத்தை மாகாண ஆளுநர் அலுவலகம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
அந்நாட்டில் 2 நாட்களுக்கு முன்பு கோர் என்ற மாகாணத்தில் பிரோஷ் கோ நகரில் காவல் அலுவலகம் வெளியே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழக்க, 90 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article