தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ராவுரியாளா என்ற கிராமத்தில் இருக்கும் புறம்போக்கு நிலங்களை நடிகைகள், மற்றும் பிரபலங் களுக்கு விற்று மோசடி நடந்துள்ளது அம்பலத்துக்கு வந்துள்ளது.
ரவுரியாளா கிராமத்தில் அரசுக்கு சொந்த மான புறம்போகு நிலங்கள் உள்ளது. அந்த நிலங்களில் விவசாயிகள் ஆக்ரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். நில மோடி கும்பல் ஒன்று அதை அப்படியே மடக்கி கோடிகளை சுருட்ட திட்டமிட் டதும் விவசாயிகளுக்கு 1 ஏக்கர் ரூ 5 லட்சத்துக்கு வாங்கி வளைத்துப் போட்டது. பின்னர் கோடீஸ்வரர்களை குறி வைத்து வியாபாரத்தில் ஈடுட்டது. போலி பத்திரங்கள் தயாரித்து அதனை 1 கோடி மதிப்பு என்று சொல்லி விற்றிருக் கின்றார். நிலத்தில் முதலீடு செய்யம் எண்ணத்தில் நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்களும், கிரிக்கெட் வீரர் சச்சின் மனைவி அஞ்சலியும் கோடிகள் கொட்டி நிலம் வாங்கி இருகிறார்களாம். நிலம் வாங்கிப்போட்ட குஷியில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அந்த நிலங்கள் அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நிலங்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ரியல் எஸ்டேட் பங்குதாரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான சுதீர் ரெட்டி. இதனை அம்பலப்படுத்தி இருக்கிறார்.
அரசுக்கு சொந்தமான நிலம் என்பதால் சட்ட நடவடிக்கை எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் முதலீடு செய்த நடிகைகள் செய்வதறியாது மவுனம் சாதித்து வருகின்றனர்.