பாட்னா:
லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரசாத் கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி தரப்படும் என பா.ஜ. பிரமுகர் அறிவித்து உள்ளார். இது பீகாரில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரில் பாஜகவுக்கும் லல்லு கட்சிக்கும் இடையே கடும் மோதல் போக்கு உருவாகி உள்ளது. ஆட்சியில் இருந்த லாலுவின் மகனை பதவி விலக்கி விட்டு, நிதிஷ்குமாருடன் கூட்டணி சேர்ந்த அமைந்ததில் இருந்து இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் வீடு புகுந்து தாக்குவோம் என ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் மிரட்டியிருந்தார். அவரது பேச்சு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்த வீடியோவும் வைரலாக பரவியது.
இதற்கு பதிலடியாக, பாட்னா மாவட்ட பா.ஜ., ஊடக தொடர்பாளர் அனில் சானி என்பவர், தேஜ் பிரதாப் யாதவ் கன்னத்தில் அறையும் நபருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இது மேலும் சர்ச்சையை பெரிதாக்கியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மாநில பாஜக தலைமை, அனில் சானி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உள்ளது.