பாட்னா:
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மகன் தேஜ் பிரதாபுக்கு வரும் 12ம் தேதி திருமணம் நடக்கிறது.
இதில் கலந்துகொள்ள 5 நாள் பரோல் கேட்டு லாலு விண்ணப்பம் செய்தார். இதற்கு சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று சிறையில் இருந்து விடுதலையானார். வரும் 14ம் தேதி வரை லாலுவுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.