பாட்னா,

குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்துவரும் ராகுல்காந்தி அங்குள்ள சோமநாதர் ஆலயத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்த நிகழ்வை பிரதமர் மோடி உள்பட பாரதியஜனதா கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

குஜராத்தில் ராகுலுக்கு பெருகி வரும் ஆதரவு காரணமாக, ஆட்சியை பறிகொடுத்து விடுவோமே என்ற பயத்தில், ராகுலின் புகழை சீர்குலைக்கவே இதுபோன்று பாஜக வினர் சர்ச்சையை உருவாக்கி வருவதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தள தலைரும், முன்னாள் ரெயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,  அடிப்படை பிரச்சனைகளில் இருந்து வாக்காளர்களின் கவனத்தை திசை திருப்பவே பிரதமர் மோடி இவ்வாறு பேசி வருகிறார் என்று லாலு பிரசாத் கூறினார்.

முன்னோர்கள் கட்டிய கோவில் என்றால் மட்டுமே கோவிலுக்குள் நுழைய வேண்டும் என மத்திய அரசு சட்டம் இயற்றம் வேண்டியதுதானே என்றும் லாலுபிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.