ராஞ்சி,

ழல் புகார்களில் சிக்கி, தற்போது சிறையில் உள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத், குற்றவாளி என்று ராஞ்சி நீதிமன்றம்  மீண்டும் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

எற்கனவே கால்நடை தீவனம் தொடர்பான வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள லாலு மீது, 3வது வழக்கில் அவர் குற்றவாளி என ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து உள்ளது.

 

பீகார் மாநில முதலமைச்சராக 1990 – 1997 வரை லாலு பதவி வகித்தபோது, கால்நடை தீவன திட்டத்தில் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லாலு மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. அதையடுத்து சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில், ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் பெற்றார்.

இதையடுத்து சிறையில் லாலு அடைக்கப்பட்டார். இதன் பின்பு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து அவர் ஜாமீனில் இருந்தார். இந்நிலையில், சமீபத்தில் மற்றொரு வழக்கில் லாலு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்.

இந்நிலையில், கால்நடை தீவன 3-வது ஊழல் வழக்கிலும்  லாலு மற்றும் ஜெகன்நாத் மிஸ்ரா குற்றவாளி என   சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர்மீதான சிறை தண்டனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

லாலு மீது இன்னும் 2 வழக்குகள் தீர்ப்புக்காக காத்திருக்கின்றன.