டெல்லி: முன்னாள் பீகார் முதல்வர், காய்ச்சல் காரணமாக எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும் முன்னாள் பீகார் மாநில முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சரும்,லல்லு பிரசாத் யாதவ் தற்போது, மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலையானார். இதையடுதது, அவர் பீகாரில் வசித்து வருகிறார். அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்று வருகிறார்.
அதுபோல கடந்த வாரம் மாட்டுத்தீவன வழக்கு ஒன்றில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜராக டெல்லி வந்தார். அங்கு நீதிமன்ற விசாரணை ஆஜரானதுடன, டெல்லியில் தங்கியிருந்தார். அங்கு அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. கடுமையான காய்ச்சலால் அவதியுற்று உடல் சோர்வான நிலையில், சிகிச்சைக்கா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை தீவிர சிகிச்சை பரவில் அனுமதித்துள்ள மருத்துவர்கள், அவருக்கு சிகிச்சை அளித்ததுடன், ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். தற்போது அவரது உடல்நிலை சீராகி வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த லாலுபிரசாத், மத்தியஅரசின் மக்கள் விரோத ஆட்சி காரணமாக பல புகழ்பெற்ற நிறுவனங்களின் வேலையின்மை, வறுமை, மேம்பாடு, சட்டம் ஒழுங்கு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் வீழ்ச்சி கண்டுள்ளதாக நிதி ஆயோத் அறிக்கை தெரிவித்து உள்ளதாக கூறினார்.