சென்னை: பிரபலமான லலிதா ஜுவல்லரி நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை உள்பட 25 இடங்களில் வருமான வரித்துறை சோதனை இன்று 2வது நாளாக தொடர்ந்து வருகிறது.
சென்னை தி.நகரில் உள்ள பிரபல நகை விற்பனை நிறுவனமான லலிதா ஜுவல்லரி. இந்த நிறுவனம்மீது வரிஏய்ப்பு புகார்கள் எழுந்த நிலையில், வருமான வரித்துறையினர், திநகரில் உள்ள கடை உள்பட தமிழகம் முழுவதும் லலிதா ஜுவல்லரிக்கு சொந்தமான சுமார் 25 இடங்களில் நேற்று திடீரென சோதனை மேற்கொண்டனர்.
தி.நகரில் லலிதா ஜுவல்லரிக்கு, அண்ணா நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, திருச்சி, மதுரை, கும்பகோணம் மற்றும் புதுவை உள்ளிட்ட இடங்களில் 15 கிளைகள் உள்ளது. இந்த அனைத்து கிளைகள் உள்பட நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, முக்கிய உறவினர்கள் வீடு எனஎன மொத்தம் 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை இன்று 2வது நாளாக தொடர்கிறது.
இந்த சோதனையின்போது, அந்நிறுவனத்திடம் உள்ள முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும், அதைக்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விசாரணைக்க பிறகே, லலிதா ஜூவல்லரி வரி ஏய்ப்பு செய்துள்ளதா என்பது தெரிய வரும்.