மைசூரு

பிரதமர் மோடி தங்குவதற்கு மைசூரு லலித் மகால் பேலஸ் ஓட்டலில் ரூம் இல்லாததால் வேறு இடத்தில் அதிகாரிகள் ரூம் தேடினார்கள்.

பிரதமர் மோடி மைசூரு வரும் போது வழக்கமாக மைசூரு நகரில் உள்ள லலித் மகால் பேலஸ் ஓட்டலில் அறை ஏற்பாடு செய்வது வழக்கமாகும்.     தற்போது மைசூருவில் சில நிகழ்வுகளில் தங்குவதற்காக மோடி வந்துள்ளார்.   நேற்று இரவு வந்த அவர் இன்று சரவணபெலகொலா கோயிலின் ஒரு நிகழ்வுக்கு சென்றுள்ளார்.   மதியம் திரும்ப மைசூரு வந்து இரட்டை ரெயில் பாதை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த முறை மோடி தங்குவதற்கு லலித் மகால் பேலஸ் ஓட்டலில் அறைகள் கேட்டபோது அங்கு அறைகள் காலி இல்லை என நிர்வாகம் கூறி விட்டது.   ஆனால் ஒரு திருமண கோஷ்டி அங்கு அறைகளை ஏற்கனவே முன்பதிவு செய்து விட்டதால் மோடிக்கு 3 சாதாரண அறைகள் மட்டுமே வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்தது.   ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த மூன்று அறைகள் போதாது என பிரதமர் அலுவலக அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

ரேடிசன் புளூ ஓட்டல்

அதற்குப் பிறகு பிரதமர் அலுவலக அதிகாரிகள் அவர் தங்க பல இடங்களில் அறை தேடி உள்ளனர்.  தற்போது ரேடிசன் புளூ என்னும் மற்றொரு ஓட்டலில் மோடிக்காக அறைகள் பதிவு செய்துள்ளனர்.