லக்னோ: வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க லக்கிம்பூர் சென்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை போலீஸார் தடுத்தி நிறுத்தியதால் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்த நேரத்தில்,அந்த பகுதியில் காரில் வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் உள்பட பாஜகவினரின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றது. இதனால் கார்கள் நிலைதடுமாறி விவசாயிகள் மீது மோதியதில் 2 விவசாயிகள் இறந்தனர். இதனால், இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பாஜகவினரின் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 விவசாயிகள் மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாககாவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், விவசாயிகளை சந்திக்க அரசியல் கட்சியினர், எதிர்க்கட்சியினர் லக்கிம்பூர் செல்ல முயன்று வருகின்றனர். ஆனால், அங்கு 144 போடப்பட்டுள்ளார், வெளியில் இருந்து அங்கு செல்ல யாரையும் அனுமதிக்க காவல்துறையினர் மறுத்து வருகின்றனர்.
அங்கு வந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தடையை மீறி அங்கு செல்ல முயன்றார். அவரை கால்துறையினர் தடுத்தனர். அதனால், அவர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அகிலேஷ் யாதவை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக, விவசாயிகளை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்க காந்தியும் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா உ.பி.யில் கைது! பரபரப்பு…