டெல்லி: உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பான விசாரணையை உச்சநீதி மன்றம் தொடங்கி உள்ளது. வன்முறையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில், லகிம்பூர் கேரி பகுதியில் கடந்த 3ந்தேதி அரசு விழாவுக்கு  சென்ற மத்திய உள்துறை  மந்திரி அஜய் மிஸ்ரா மகன் ஆசிஸ் மிஸ்தா  சென்று கொண்டிருந்தனர். அங்கு விவசாயிகள்  பாஜகவினருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வந்தனர். ஆசிஸ்மிஸ்ரா சென்ற கார்,  விவசாயிகள் மீது  மோதிவிட்டு சென்றது. இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். இதையெடுத்து வன்முறை ஏற்பட்டது. அதில்,  4 பாஜகவினர், பத்திரிகையாளர்  பலியாகனினர். மொத்தம் 9 பேர் பலியாகினர். விவசாயிகள் மீது காரை மோதியவர், மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் என கூறப்படுகிறது. வன்முறையைத் தொடர்ந்து. லகிம்பூர் கெரி பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. மேலும், அது தொடர்பான வீடியோவும் வெளியானது.  இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் சூமோட்டோ வழக்கு பதிவு செய்து, இன்று விசாரணை செய்ய உள்ளதாக அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் ,  லக்கிம்பூர் கேரி சம்பவத்தை உச்சநீதிமன்றம் தன்னிச்சையாக ஏற்றுக்கொண்டது மற்றும் இந்தியாவில் நீதிமன்றங்கள் குரல் இல்லாதவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கக்கூடிய நீதி கோவில்கள் என்று கூறினார்.  இந்திய தலைமை நீதிபதிக்கு நன்றி தெரிவித்தார்,

இதையடுத்து வழக்கு இன்று தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  விசாரணையின்போது உ.பி. மாநிலம் சார்பில் ஆஜரான வழக்றிஞர்,  லக்கிம்பூர் கேரி வன்முறை இறப்பு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், மாவட்ட அளவிலான குழுவும் விசாரணை நடத்தி அறிக்கைஅளிக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லக்கிம்பூர் கேரி வன்முறை – இறப்பு விவகாரத்தில், யார் குற்றம் சாட்டப்பட்டவர்கள், எவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் யார் என்ற  நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரபிரதேசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.