கொழும்பு,
இலங்கையில் சினிமி தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தால் கட்டப்பட்ட வீடுகள் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, வவுனியா – சின்ன அடம்பன் பகுதியில் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை சார்பாக, போரின் காரணமாக வீடு இழந்த தமிழர்களுக்காக சுமார் 23 கோடி ரூபாய் அளவில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த வீடுகளை தமிழர்களிடம் ஒப்படைக்க ரஜினிகாந்த் இலங்கை செல்வதாக இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் எழுந்த பலத்த எதிர்ப்பு காரணமாக அவர் இலங்கை செல்வதை தவிர்த்தார்.
இந்நிலையில், அந்த வீடுகளை லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் தலைவர் ஞானாம்பிகை அல்லிராஜா, சுபாஸ்கரன் அல்லிராஜா ஆகியோர் அந்த வீடுகளை தமிழர்களுக்கு வழங்கினர்.