புதுடெல்லி: 
ந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் இரும்பால் அடித்து கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ராணுவ வீரர்களுக்கு தங்களுடன் இருந்த மற்ற வீரர்களின் உடலை தேடி கண்டுபிடிக்கவே பல மணி நேரம் ஆகியுள்ளதாக கூறியுள்ளனர். ஜூன் 15 -ஆம் தேதி நடந்த தாக்குதலில் மற்ற உடல்களை ஜூன் 16-ஆம் தேதிதான் கண்டுபிடித்துளனர்.
இரு ராணுவத்தினருக்கும் இடையில் மோதல்கள் தீவிரமாக இருந்ததால், சரியான விவரங்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று மூத்த ராணுவ அதிகாரிகள் கூறுயிருந்த நிலையில் நேற்று இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் தன்னுடைய ட்விடர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
கால்வான் நிலபரப்பில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே ஜூன் 15-ஆம் தேதி மாலை 7.30 மணியளவில் துவங்கிய மோதல் நள்ளிரவு வரை தொடர்ந்தது என்றும் கடந்த 45 ஆண்டுகளில் இந்திய சீன ராணுவத்தினரிடையே இவ்வளவு உக்கிரமான மோதல் நடந்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ அதிகாரியான கர்னல் சந்தோஷ் பாபு மாலை தங்களுடைய கூடாரத்தை கலைக்கும்படி, அவருடைய குழுவிற்க்கு உத்தரவிட்டடுள்ளார். அந்த நேரத்தில் சீன ராணுவ வீரர்கள் அவர்களை தாக்க துவங்கியுள்ளனர் மேலும் அங்கேயுள்ள சகதியில் இந்திய வீரர்கள் சிக்கிய போது சீன வீரர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து இந்திய வீரர்களை தாக்க துவங்கியுள்ளனர்.
கர்னல் பாபுவையும் சீன  ராணுவத்தினர் இரும்பி கம்பியால் தாக்கியுள்ளனர். பல இந்திய வீரர்கள் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு ரத்தம் விடாமல் வடிந்து உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு பூஜ்ஜியத்திற்க்கும் குறைவான வெப்பநிலை  நிலவியதாலும் பல வீரர்கள் உயிரிழ்ந்துள்ளனர்.
மேலும் இரு ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் துப்பாக்கி சூடு நடக்கவில்லை என்றும் சீன வீரர்கள் போருக்கு தாயாராக வந்திருந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இரு ராணுவத்தினரிடையே மோதல் நடந்து முடிந்த பின்னர், இந்திய ராணுவ வீரர்களின் உடல்களை  மீட்பதும், காயம் தீவிரமாக காயமடைந்தோரை கொண்டு செல்லவே பெருப்பாடகி விட்டதாகவும், உடனடி உதவிக்கு யாரையும் அழைக்க முடியாத நிலமையில் இருந்ததாகவும்,  அங்கு ஆக்ஸிஜன் அளவும் குறைவாகவே இருந்ததாகவும், ஆற்றில் இருந்த உடல்களை அடுத்த நாள்தான் மீட்டெடுத்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்ததாகவும், சீன வீரர்கள் பலரும் உயிரிழ்ந்துள்ளதாகவும் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.