வேலைவாய்ப்பு உருவாக்கம் வீழ்ச்சி!! தொழிலாளர் துறை தகவல்

மும்பை:

அதிக பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்பை அதிகரிக்காது என்ற விவாதம் தற்போது உண்மையாகியுள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்குதல் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தொழிலாளர் நலத்துறையின் புள்ளி விபரங்கள் இருப்பதாக ஜேஎம் பைனான்சியில் புரோக்கரேஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு சர்வேயின் அடிப்படையில் 0.19 மில்லியன் (வங்கிகள் தவிர்த்து) புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2017ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இருந்தது. ஆனால், 2016ம் நிதியாண்டில் பட்டம் பெற்றவர்கள் 8.8 மில்லியனாக உள்ளனர்.

தொழிலாளர்களின் தேவைக்கும், அதற்கு ஏற்ப வெளிவரும் பட்டதாரிகள் கிடைக்கும் எண்ணிக்கையை பொருத்து தான் புதிய வேலைவாய்ப்பு உருவாக்குதல் குறித்த விபரம் தெரியவரும்.

கடந்த வாரம் ரிசர்வ் வங்கியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நிதிஆயோக் துணைத் தலைவர் அரவிந்த பனாகரியா கலந்து கொண்டு பேசுகையில் வேவையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக எதிர்கட்சிகளும், பொருளாதார நிபுணர்களும் பெரிது படுத்தி வருகின்றனர். இவர்களின் குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார். தொழிலாளர் சந்தை 7 முதல் 8 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் 3 சதவீதம் மட்டுமே உள்ளது என்று குறிப்பிட்டார்.

காலாண்டு வேலைவாய்ப்பு சர்வே மற்றும் ஆர்பிஐ வேலைவாய்ப்பு புள்ளி விபரங்களின் அடிப்படையில் 2.5 மில்லியன் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 65 சதவீத பங்களிப்பை அளிக்கும் 9 தொழிலாளர் துறைகளில் இத்தகைய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.

2011-13ம் நிதியாண்டில் 22.7 மில்லியன் பேர் பட்டம் பெற்றுள்ளனர். அடுத்த மூன்றாண்டுகளில் வேலைவாய்ப்பு ஒரு மில்லியன் என்ற நிலையிலும், பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 25.9 மில்லியன் என்ற நிலையிலும் இருந்தது. அதாவது 27 மாணவருக்கு ஒரு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலாணடு அடிப்படையில் 0.19 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், 8.8 மில்லியன் மாணவர்கள் 2016ம் நிதியாண்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2000ம் ஆண்டு முதல் தனியார் நிறுவனங்கள் தான் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதுவும் தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது. தனியார் நிறுவனங்களில் இன்சூரன்ஸ், நிதி, ரியல்எஸ்டேட் போன்றவை வேகமாக 16 சதவீத வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


English Summary
Labour dept data shows job creation has declined