
இயற்கை, ஈ, பேராண்மை போன்ற சிறந்த படைப்புக்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் லாபம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் லாபம் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதியுடன் டேனியல் ஆனி பாப், கலையரசன் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். விரைவில் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என்ற தகவலை படக்குழு தந்துள்ளது. மேலும் படத்தின் பிரத்தியேக புகைப்படங்களையும் வெளியிட்டது படக்குழு.
Patrikai.com official YouTube Channel