டெல்லி: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்குவதாக குவைத் நாடு அறிவித்து உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா 2-வது அலை தாக்கியதை அடுத்து பல நாடுகள் மீண்டும் விமான சேவைகளை முடக்கின. அதுபோல, குவைத் நாடும், இந்தியா உள்பட பல நாடுகளுக்கான விமான சேவையை முடக்கியது.
தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதால், மீண்டும் பல நாடுகள் விமான சேவைகளை தொடங்கி உள்ளன. குவைத்தும் மீண்டும் இந்தியா உள்பட பல நாடுகளுக்கு விமான சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளது.
இந்தியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் வணிக விமான சேவைகளை மீண்டும் தொடங்கும், வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாளம் ஆகியவற்றுடன் விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளின் போக்குவரத்து ஏற்கனவே நிறுத்தப்பட்டு இருந்தது. ஜூலை 1-ந்தேதி முதல் அந்த நாடுகளுக்கு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டு விமான சேவை நடைபெற்று வருகிறது.. இந்த நிலையில் இந்தியாவுக்கான போக்குவரத்தும் தொடங்கப்படும் என்று அறிவித்து உள்ளது.