கர்நாடகாவில் ஹிஜாப் தொடர்பாக இஸ்லாமிய பெண்கள் மீது வெறுப்புணர்வுடன் நடந்து கொள்ளும் விவகாரம் தொடர்பாக குவைத் பாராளுமன்ற குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

https://twitter.com/MJALSHRIKA/status/1494386990376263683

மேலும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வும் துன்புறுத்தலுக்கு அதிகரித்து வரும் சூழலைக் கருத்தில் கொண்டு ஆளும் பா.ஜ.க. உறுப்பினர்கள் யாரும் குவைத் நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று பரிந்துரை செய்துள்ளது.

இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் குவைத் மன்னர் முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான துன்புறுத்தல் அதிகரித்து வருவது நல்லதல்ல என்றும் இதனால் இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் நல்லுறவில் பாதிப்பு ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. சஷிதரூர் தெரிவித்துள்ளார்.