அமெரிக்காவைப் பின்பற்றி, பாகிஸ்தான் உள்ளிட்ட நான்கு நாட்டவர்கள் தங்கள் நாட்டுக்குள் வருவதற்கு, குவைத் அரசு தடை விதித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் அறிவித்த சட்டத்தின்படி, சிரியா உள்ளிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இனி அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது.
அமெரிக்காவைப் பின்பற்றி அர்ஜென்டினாவும், தனது குடியேற்ற விதிகளில் கடும் கெடுபிடிகளைச் செய்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் வழியில் இரண்டாவது நாடாக, குவைத் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன்படி, சிரியா, ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இனி குவைத்திற்குள் நுழைய முடியாது. அவர்கள் இனி குவைத் விசா எடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாதத்தோடு தொடர்புடையவர்கள் நாட்டிற்குள் நுழைந்து விடக் கூடாது என்ற பாதுகாப்பு நடவடிக்கை இது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ட்ரம்ப்பிற்கும் முன்பே, சிரியா நாட்டவர்கள் உள்ளே நுழையக் கூடாது என, 2011ம் ஆண்டே தடை விதித்த நாடு, குவைத் என்பது குறிப்பிடத்தக்கது.