குவைத்:
குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படுவதாக குவைத் அரசு அறிவித்துள்ளது.
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக குவைத் உள்துறை அமைச்சகம் தமிழில் அறிவிப்பை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் விசா முடிந்த பின்னரும் குவைத்தில் தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும், சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் எந்தவித அபராதமும் செலுத்தாமல், தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பு செல்லலாம் என்றும். இப்படி சொந்த நாட்டுக்கு செல்பவர்கள் விமான டிக்கெட் உள்பட எந்த ஒரு கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி இப்படி நாடு திரும்பியவர்கள், புதிய விசா மூலம் மீண்டும் குவைத்துக்கு வர தடையில்லை என்றும், தற்போது நாடு திரும்ப விரும்புபவர்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்தும் இலவசமாகவே செய்து தரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குவைத்தில் இருந்து சொந்த நாடு திரும்ப விரும்புபவர்கள் காலை எட்டு மணி முதல் மதியம் 2 மணி வரை வாரத்தின் ஏழு நாட்களுக்கும், இந்தியராக இருந்தால் ஏப்ரல் 11 முதல் 15 வரையும், இலங்கை நாட்டை சேர்ந்தவராக இருந்தால் ஏப்ரல் 21 முதல் 25-ஆம் தேதி வரை ஃபர்வானியா பெண்கள் ஆரம்ப பள்ளி, பிளாக் 1, தெரு 76- என்ற இடத்திற்கு வந்து உதவிகளை பெற்று கொள்ளலாம் என்றும், இதுவே பெண்களாக இருந்தால், ஃபர்வானியா முத்தன்னா ஆண்கள் ஆரம்ப பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.