தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பி.வாசு அவர்களின் மகன் நடிகர் சக்தி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1-ல் சக்தி போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றவர். சக்தி கடைசியாக நடித்த திரைப்படம் 7 நாட்கள்.
தற்போது இயக்குனர் ஹுஸைன் சாலா எழுதி இயக்கும் குற்றவாளி திரைப்படத்தில் சக்தி கதாநாயகனாக நடித்துள்ளார்.
வீகி பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் குற்றவாளி படத்திற்கு தினு மோகன் இசையமைத்துள்ளார். ஷமீர் ஜிப்ரான் ஒளிப்பதிவு செய்துள்ளார். குற்றவாளி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Happy to launch this look of my bro Shakthi 😊 #Veekeyfilmfactory #Huzain_salah #Dinu_mohan #Saran_indokera #Vishnu_moorad #Shameer_Gibran #Riyasalif pic.twitter.com/gO9ZFDQ4OX
— Jayam Ravi (@actor_jayamravi) September 3, 2021