சென்னையில் கொரோனா தொற்றால் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் தங்களுடைய வேதனையை பகிர்ந்துள்ளனர்.
இந்நிலையில் குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் :-
“நாம் எப்படி மாறிக்கொண்டிருக்கிறோம்? நம் சக மனிதர்களின் உயிர்களைக் காப்பாற்ற ஒருவர் தன் உயிரை விட்டிருக்கிறார். படிப்பறிவில்லாத அல்லது ரவுடிகள் அல்லது குண்டர்கள், எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள், அந்தக் கூட்டம் தடுத்துள்ளது.
இது போன்ற ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் என்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். அவரிடம், அவர் குடும்பத்திடமும் நாம் மன்னிப்பு கோர வேண்டும். மரணம் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு மனிதரும் உரித்தானவரே. ஆனால் அதை அவரது ஆன்மாவுக்கு நாம் செய்யவில்லை. என்றும் நாம் குற்ற உணர்வுடன் இருப்போம்” என பதிவிட்டுள்ளார்.