கொரோனா ஊரடங்கினால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால் பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்கள் மூலமாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
தற்போது கொரோனா அச்சுறுத்தல் சென்னையில் அதிகமாகி வரும் சூழலில் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


“வாழ்க்கையின் மிகவும் கடினமான சூழலில் நாம் இப்போது இருக்கிறோம். இந்த கிருமி தொற்று மிகவும் புதியது. அடுத்தது நாம் என்ன செய்வது என்று நமக்கு தெரியவில்லை. வாழ்க்கை தற்போது இயங்கமுடியாத ஒரு நிலைக்கு வந்துள்ளது. இயல்பாக உணரவும் இயல்பாக இருக்கவும் நாம் வெளியில் சென்று பணிபுரிய வேண்டியுள்ளது.
நாம் இருந்த பழைய வாழ்க்கை முறைக்கு செல்லவேண்டியிருக்கிறது. ஆனால் நாம் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், முகக்கவசம் அணிவது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் செல்லுங்கள். அப்படி செல்லும்போது முகக்கவசம் அணிவதற்கு மறக்காதீர்கள்.
நீங்கள் ஏன் அணியவில்லை என்று நீங்கள் என்னிடம் கேட்கலாம். நான் வீட்டில் இருக்கிறேன். நான் வெளியில் செல்வதில்லை. அப்படி செல்வதாக இருந்தால் நான் அதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன். ஏனெனில் என்னுடன் இந்த வீட்டில் வயதில் மூத்தவர்களான என் அம்மாவும் என் மாமியாரும் இருக்கிறார்கள். அவர்களின் உடல்நலனின் எனக்கு மிகுந்து அக்கறை உள்ளது.
நீங்கள் வெளியே சென்றால் தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள்,. ஏனென்றால் நான் சென்றாலும் நிச்சயம் முகக்கவசம் அணிவேன். தயவு செய்து உங்கள் உடல்நலனை கவனத்தில் கொள்ளுங்கள். முகக்கவசம் அணிய மறக்காதீர்கள். இதை உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் அனைவரிடம் வலியுறுத்துங்கள்.இது உங்களுக்கு, நமக்கு, நம் சமுதாயத்துக்கு என அனைவருக்கும் நலனுக்கு முக்கியமானது” என தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]