
டில்லி:
குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறி உள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயற்சிக்கு சென்ற பலர் காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உரிரிழந்துள்ள நிலையில் 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து மற்றும் பலர் பலியானது நாடு முழுவதும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், மீட்கப்பட்ட பலரின் நிலைமை கவலைக்கிடமாக மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், விபத்துக்குறித்து தகவல் அறிந்த துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]