
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நரேன் அடுத்ததாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது.
கட்ரிஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் நஜிப் கடிரி தயாரிப்பில் இயக்குனர் சுகீத் இயக்கத்தில் உருவாகும் குரல் படத்தில் நடிகர் நரேன் கதாநாயகனாக நடித்துள்ளார். ராக்கேஷ் சங்கரின் கதை திரைக்கதையில், சந்துரு வசனங்களை எழுத விவேக் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ் & மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள குரல் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் மங்கல் சுவர்ணன் மற்றும் சஷ்வத் சுனில்குமார் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது குரல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
[youtube-feed feed=1]Happy birthday brother @itsnarain 😊#KURAL is looking unique and interesting. All the best to the team! pic.twitter.com/slKSwvvq0r
— Karthi (@Karthi_Offl) October 7, 2021