சென்னை:
குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

சென்னை குன்றத்தூரில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கோவில் புதுப்பித்து சீரமைக்கப்பட்டது.

கும்பாபிஷேகம் விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி யாகசாலை பூஜைகளும் நடைபெறன.

இந்நிலையில், இன்று குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. ரத்னகிரி தலத்திற்கு பாலமுருகனடிமை சாமிகள் மற்றும் திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுரம் ஆதின சுவாமிகள் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

இதில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.