சென்னை:

மிழகத்தில் மேலும் இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்குவது குறித்து தமிழக முதல்வர் திட்டமிட்டு வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் சமீபத்தில் சில மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது மொத்தம் 35 மாவட்டங்கள் உள்ளன. இந்த நிலையில், வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில்   கும்பகோணம் மற்றும் பொள்ளாச்சி என  இரண்டு புதிய  மாவட்டங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் சட்டமன்றக் கூட்டதொடரில்,  விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கப்படுவதாக எடப்பாடி அறிவித்திருந்தார். அதன்பிறகு, திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும்,  காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல் பட்டை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஏற்கனவே  33 மாவட்டங்கள் இருந்த நிலையில் 34-வது மாவட்டமாக தென்காசியும், 35-வது மாவட்டமாக செங்கல்பட்டும் உருவானது.

புதிய மாவட்டங்களின் எல்லையை வரையறை செய்ய தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

இப்போது தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாகக்கொண்டு ஒரு மாவட்டமும், கோவை மாவட்டத்தை பிரித்து பொள்ளாச்சியை தலைமையிடமாகக்கொண்டு ஒரு மாவட்டமும் உருவாக்க கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  தமிழக ருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கும்பகோணத்தையும், பொள்ளாச்சியையும் தனி மாவட்டமாக்குவது குறித்த முதலமைச்சர் ஆலோசித்து விரைந்து முடிவெடுப்பார் என்று கூறி உள்ளார்.

கடந்த ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரத்தன்று பேசிய முதல்வரின் உரையில்,  நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் பிரிக்க முடிவு செய்துள்ளதாகவும்,  திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் என்றும், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என புதிய மாவட்டங்கள் உதயமாகும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது பொள்ளாச்சி, கும்பகோணம் தனி மாவட்டமாக உதயமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்த மாவட்ட எண்ணிக்கை 39ஐ தொடும் வாய்ப்பு உருவாகி உள்ளது.