கும்பகோணம்: கும்பகோணம் நடனபுரீஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்ட ஐம்பொன் சிலை 51 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்தசிலைகள் 1971ம் ஆண்டு காணாமல் போனது. அதை அமெரிக்காவில் இருந்து மீட்டு தமிழ்நாடு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
12ம் நூற்றாண்டை சேர்ந்த பார்வதி சிலை கும்பகோணத்தில் நடனபுரீஸ்வரர் கோயிலில் இருந்து 1971ம் ஆண்டு திருடு போனது. இந்த சிலையை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், திருடப்பட்ட 5 பஞ்சலோக சிலைகளில் ஒன்றான பார்வதி சிலை சுமார் 51வருடத்திற்கு பிறகு அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பார்வதி சிலையானது, ஐம்பொன்னால் ஆனது என்றும், சுமார் 50 செமீ உயரத்தில் உள்ளதாகவும், இது சோழர் காலத்து பார்வதி சிலை என்று கூறிய அதிகாரிகள் அதன்படி ரூ1 கோடிக்கம் மேலானது என்று தெரிவித்து உள்ளது.
இந்த சிலை, அமெரிக்காவில் உள் போன்ஹாம்ஸ் ஏல இல்லத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பார்வதி சிலை 12ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதும், 16 கோடிக்கு மேல் விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த ஐம்பொன் பார்வதி சிலையை மீட்டு இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.