மைசூரு பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களைத் தடுக்க என்கவுண்டர் அவசியம் –   ஹெச்டி குமாரசாமி பேச்சால் சர்ச்சை

Must read

பெங்களூரூ:
மைசூரு பாலியல் பலாத்காரம் போன்ற கொடூரமான குற்றங்களைத் தடுக்க என்கவுண்டர் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்று  கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமி தெரிவித்தார்.
மைசூரில் நடந்த கற்பழிப்பு சம்பவம் குறித்து குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், திசா பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வர், கடந்த  2019 டிசம்பர் மாதம் என்கவுன்ட்டர் கொல்லப்பட்டதை போன்று,  கர்நாடகாவின் மைசூருவில் முதுநிலை வணிக நிர்வாகம் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில்,  குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தண்டனையாக,  அவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று  பரிந்துரைத்தார்.
மேலும் பேசிய அவர்,  குற்றம் நடந்த இடத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மது அருந்தி இருந்ததாக வெளியான செய்திகளைக் குறிப்பிட்டு, கர்நாடக அரசு பொது இடங்களில் மது அருந்துவதைத் தடுக்க கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“ஹைதராபாத் காவல்துறையின் ஒரு கற்பழிப்பு வழக்கைக் கையாண்ட விதத்தை நான் பாராட்டுகிறேன். இறுதியாக அவர்கள் என்ன செய்தார்கள்? கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாலியல் வன்கொடுமை குறையாது  என்று அவர் கூறினார்.
மைசூரு பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களைத் தடுக்க என்கவுண்டர் அவசியம் என்ற  குமாரசாமியின் கருத்தைப் பலர் கண்டித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் குமாரசாமியின்  அறிக்கையைப் பொறுப்பற்றது என்று தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article