கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தனியார்  பள்ளியில் முறைகேடாக நடைபெற்ற என்சிசி கேம்பில் 12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக  கைது செய்யப் பட்ட சிவராமன் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்த நிலையில், அதனால் மனம் உடைந்த அவரது அதிக அளவில் மது குடித்த நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் பள்ளி முறையாக விசாரிக்காமல் போலியான ஒரு முகாமை நடத்த அனுமதி அளித்த  தான்தோன்றித்தனமான நடவடிக்கை காரணமாக இன்று இரு உயிர்கள் பலியாகி உள்ளதுடன், பாதிக்கட்பபட்ட பள்ளி மாணவிகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளன.

கிருஷ்ணகிரி அருகே பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில்,  சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. உயிரிழந்த சிவராமன் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான  சிவராமனின் தந்தை அசோக்குமார் அதிக அளவில் மது குடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது, இடையில் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி  பர்கூர் பகுதியில் செயல்பட்டு வரும் கிங்ஸ்லி  கார்டன்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி  என்ற கிறிஸ்தவ  தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு நடைபெற்ற  பாலியல் வன்கொடுமை சம்பவம்  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  சமீபத்தில்தான் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பெண் மருத்துவர் பாலியல் கொலை, மகாராஜஷ்டிராவில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்  போன்ற சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்,  தேசிய மகளிர் ஆணையம்  தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போலி பயிற்சியாளர் சிவராமன் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களும்  கைது செய்யப்பட்டு்ளளன்ர. மொத்தம் 11 பேர் ைகது ெச்யய்பபட்டு உள்ளன்ர. இதற்கிடையில் கைது செய்யப்பட்ட சிவராமனை போலீசார் கடுமையாக தாக்கி காலை உடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் போலீசில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற போது கீழே விழுந்து கால் உடைந்ததாக கூறப்பட்டது. இதனால், அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்  மருத்துவமனையில் சிகிச்யின்போது,  எலிபேஸ்ட் சாப்பிட்டு, சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாகவும்,  இதனால் அவரை  சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்புடன்  சிகிச்சையில்  இருந்தபோது, அவருக்கு எலி பேஸ்ட் எப்படி கிடைத்தது, அதை வாங்கிக்கொடுத்தது யார் என்பது குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இது மர்மமாகவே உள்ளது. ஆனால் இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், கைது செய்யப்படுவதற்கு ஒருநாளைக்கு முன்னதாகவே எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், சிவராமன் கைது செய்யப்பட்டு, கால் உடைக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், இரண்டு நாட்களுக்கு  பிறகே அவர் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுவது நெருடலை ஏற்படுத்துகிறது. 

இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிவராமனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் காவேரிப்பட்டினம் நடேசா திருமண மண்டபம் அருகே மதுபோதையில் கீழே விழுந்ததில் சிவராமனின் தந்தை அசோக்குமார் (61) படுகாயம் அடைந்தார். தலையில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

பிரபலமான ஒரு பள்ளியில் போலியாக என்சிசி கேம்ப் நடத்த எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அவ்வளவு விவரம் தெரியாமலே அந்த பள்ளி நிர்வாகம் செயல்பட்டு வந்தது என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.  அந்தபள்ளியில்,  இதுபோன்று இன்னும் என்னென்ன முகாம்கள் அந்த பள்ளியில் நடத்தப்பட்டது. அதில் கலந்ந்துகொண்டவர்கள் யார் யார், இதுபோன்ற  பாலியல் சம்பவங்கள் அங்கு படித்துவரும் மாணவ மாணவிகளுக்கும் நடைபெற்றுள்ளதா என்பது  குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.  இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து உண்மையை வெளிக்கொணருமா என்பதை பொறுத்திருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.