ஊத்துக்கோட்டை: சென்னையின் குடிநீர்த் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள கிருஷ்ணா நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டைக்கு வந்தடைந்தது. இதை அமைச்சர் நாசர் மலர்தூவி வரவேற்றார்.
தமிழகத்தில் கோடை தொடங்கி உள்ளது. இதனால் சென்னையில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடுகளை போக்க தமிழக அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.ஏற்கனவே பருவமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஓரளவு தண்ணீர் உள்ளது. இருந்தாலும், மேலும் தேவைக்கு கிருஷ்ணாநீர் திறந்துவிடக்கோரி ஆந்திர அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
தமிழகஅரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு, கண்டலேறு அணையில் இருந்து நேற்று முன்தினம் (திங்கட்கிழமைஸ்ரீ வினாடிக்கு 500 கன அடி நீர் திறந்து விட்டுள்ளது. பின்னர் படிப்படியாக அதிகரித்து, தற்போதுநீரின் அளவு நொடிக்கு 2100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் கண்டலேறு – பூண்டிக் கால்வாய் வழியாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டைக்கு வந்து சேர்ந்தது. இதை, மிழகப் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் ஆகியோர் கிருஷ்ணா நீரை மலர்தூவி வரவேற்றனர்.