பஞ்சாப் மாநில முன்னாள் டி.ஜிபி கே.பி.எஸ் கில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

கிட்னி செயலிழப்பு காரணமாக அவர் புதுடெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உடல் நிறை தேறி வந்த நிலையில் அவருக்க இன்று திடீரென தீவிர மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த டிஎஸ். ரானா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவருக்கு பிரதமர் மோடி, சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் டுவிட்டர் மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க சிறப்பாக பணியாற்றியவர் கில் என்பது குறிப்பிடத்தக்கது.