ஐடி கம்பெனிகளின் ஆட்குறைப்பு! தொழிலாளர் நல அமைச்சகத்தில் புகார்!!

ஹைதராபாத்

இந்தியாவில் பெரும்பாலான ஐடி கம்பெனிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தொழிலாளர் நல அமைச்சகத்தில் புகார் அளித்தனர்.

டெக் மஹேந்திரா நிறுவனத்தின் “பாதிக்கப்பட்ட” தொழிலாளர்கள் நேற்று தொழிலாளர் நல வாரியத்தில் சட்டபுரம்பான நடவடிக்கைகளுக்கு எதிராக புகார் அளித்தனர்.   அவர்களின் தொழிற்சங்கமான FITE மூலமாக அளிக்கப் பட்ட புகாரை அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் இல்லை எனக்கூறி வாங்க மறுத்து விட்டனர்.

சில வாரங்களுக்கு முன் அபிலாஷ் என்னும் ஊழியரை திடீரென அவரது வேலைகளை நிறுத்தும்படி ஈ மெயிலில் உத்தரவு வந்துள்ளது.   அவர் காரணம் கேட்டபோது,  காரணம் ஏதும் இல்லை என்றும் மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவு இது என்றும் கூறப் பட்டிருக்கிறது  அபிலாஷ், தான் ராஜினாமா செய்ய முடியாதென்றும்,  கம்பெனி தன்னை விரும்பாவிடில் வேலை நீக்கம் செய்யலாம் எனவும் கூறி இருக்கிறார்,  அவர் ஈ மெயிலின் படி நடக்காமல் இன்னும்  பணியை தொடர்கிறார்

இதே போல சி டி எஸ் நிறுவனத்தை சார்ந்த சுர்ஜித் சிங்க் எந்த ஒரு பணியும் ஒதுக்கப் படாமல் உள்ளார்.  அவர் தினமும் அலுவலகம் சென்று எச் ஆர் இடம் இருந்து ஏதும் ஈ மெயில் வந்ததா என செக் செய்து விட்டு திரும்பி வந்துக் கொண்டிருக்கிறார். அவர் எட்டு வருடங்களாக பணி புரிந்து வருகிறார்.  எச் ஆர் தன்னிடம் அதிகாரபூர்வமற்ற செய்தியில் வேறு நல்ல வேலை தேடிக் கொள்ளலாம் என சொன்னதாக கூறுகிறார்.  இவர் தனது மனைவி, மற்றும் நான்கு மாத குழந்தையுடன் மற்றொரு வேலை தேடுவதாகவும்,  இந்த அளவு சம்பளம் புதிதாக சேரும் இடத்தில் கிடைக்காதெனவும் கூறுகிறார்.

இது போல எத்தனையோ பேர் இருக்கின்றனர்

அகில இந்திய வங்கி ஆஃபீசர்ஸ் யூனியன் இந்த தொழிற்சங்கத்துக்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளது


English Summary
Reduce of employees in tT companies, Complaint to Labor Ministry