சென்னை: நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  அதிமுக ராஜ்யசபா எம்.பி.க்களான கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர்,  தங்களது ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால்,  தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவிகள் 2 காலியாக உள்ளது.

மிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகின. இதற்கான தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில், திமுக மற்றும் அதிமுக தலா 3 இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்தனர். அதிமுக சார்பில்  கேபி முனுசாமி, வைத்திலிங்கம், கூட்டணி கட்சியான தமாகாவின் ஜி கே வாசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தற்போது நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில்  கே.பி.முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட கே முனுசாமி வென்பெற்றார். அதுபோல  ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கமும் வென்றார்.  இவர்கள் இருவரும் நாளை எம்எல்ஏக்களாக பதவி ஏற்க இருப்பதால், இருவரும் தற்போது தங்களது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.