சென்னை:
வரும் கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலம் வரும் 27ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட உள்ளது.
சென்னை கோயம்பேடு 100 அடிச் சாலை-காளியம்மன் கோவில் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, 100 அடிச் சாலை-காளியம்மன் கோவில் சாலை, புறநகர் பேருந்து நிலைய நுழைவாயில் சந்திப்புகளை இணைத்து மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
ரூ.94 கோடி செலவில் 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பணிகள், கடந்த செப்டம்பர் மாதத்திற்குப் பின் 3 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த மேம்பாலப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இதையடுத்து இந்த உயர்மட்ட மேம்பாலத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 27 ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார்.
இந்த மேம்பாலத்தைத் தீபாவளிக்குள் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.