மாவட்ட கல்வி அலுவலர் சுபாஷினி இதுவரை வராததால் தஞ்சை, கோவை மாவட்டங்களில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
+2 தேர்வு முடிவுகள் தமிழகத்தில் இன்று வெளியாகின. நாட்டிலேயே முதல் முறையாக தேர்வு முடிவுகள் மாணவர்களின் பெற்றோரின் செல் போன் எண்களுக்கு எஸ். எம். எஸ். அனுப்பப்பட்டன.
அதே நேரம் கோவை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை. மாவட்ட கல்வி அதிகாரி சுபாஷினி வராததால் இந்ததாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.