திருவண்ணாமலை
அண்ணாமலை தீபத்துக்கான கொப்பரை தயார் நிலையில் உள்ளது.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் அண்ணாமலை தீபம் ஏற்றப்படுவது மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். இந்த பிரம்மாண்டமான தீபம் மலை உச்சியில் ஒரு பெரிய கொப்பரையில் ஏராளமான டின்கள் எண்ணை நிரப்பப்பட்டு ஏற்றப்படும்.
இந்த தீபத்துக்குத் திரியும் பிரம்மாண்டமாக அமையும். இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தீபம் ஏற்ற தேவையான கொப்பரை தயார் செய்யப்பட்டு தீபம் ஏற்ற தயார் நிலையில் உள்ளது.
இதற்காக வேலூர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து நேற்று திருக்குடைகள் ஊர்வலம் தொடங்கி உள்ளது. இன்று இந்தக் குடைகள் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.
இந்த வருடம் தீபத்தைக் காணப் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் வழக்கமாக தீபத்தன்று வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் சிறப்புப் பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.