மும்பை: சென்னை அணிக்கெதிரான லீக் போட்டியில், மிகப்பெரிய இலக்கை விரட்டும் கொல்கத்தா அணி, துவக்கத்திலேயே தடம் புரண்டுள்ளது.
சென்னையின் தீபக் சஹார், விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். இதுவரை, மொத்தம் 3 ஓவர்கள் வீசி, 4 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார் அவர்.
கொல்கத்தா அணி, தற்போதைய நிலையில், 31 ரன்களுக்கே, 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அந்த அணி, கைவசம் இருக்கும் பந்துகளைவிட, கிட்டத்தட்ட 100 ரன்களுக்கும் அதிகமாக அடிக்க வேண்டுமென்பதால், இந்தப் போட்டியை வெல்வதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை என்று அறுதியிட்டு கூறிவிடலாம்.
இந்தப் போட்டியை, சென்னை அணி, பெரிய வித்தியாசத்தில் வென்றால், புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் என்று கூறப்படுகிறது.