துபாய்: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை அடித்தது.

பின்னர், சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி, துவக்கத்திலேயே தடம் புரண்டது. ராபின் உத்தப்பா 6 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 18 ரன்களிலும், ஸ்மித் 4 ரன்னிலும், சஞ்சு சாம்ஸன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஜோஸ் பட்லர் 22 பந்துகளில் 35 ரன்களையும், ரியான் பராக 7 பந்துகளில் 0 ரன்னையும், ராகுல் டெவாஷியா 27 பந்துகளில் 31 ரன்களையும், ஷ்ரேயாஸ் கோபால் 23 பந்துகளில் 23 ரன்களையும் அடித்தனர்.

ஆர்ச்சர் 9 பந்துகளில் 6 ரன்களையும், கார்த்திக் தியகி 2 ரன்களையும் அடித்தனர். வருண் ஆரோன் 8 பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட அடிக்கவில்லை.

இறுதியில், 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்து, 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ராஜஸ்தான் அணி.

கொல்கத்தா அணி சார்பில் பேட் கம்மின்ஸ் பிரமாதமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஷிவம் மவி மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷிவம் மவி 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட் எடுத்து 15 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.