கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி வழங்குவதாக அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்து உள்ளளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பன்னாட்டு திரைப்பட விழா இன்று தொடங்கியது. விழாவை முதலமைச்சர் மமதா பானர்ஜி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
மாநிலத்தில் தற்போது திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 100% இருக்கைகளுக்கு மாநில அரசின் சார்பில் அனுமதியளிக்கப்படுகிறது.
மக்கள் முகக்கவசங்கள் அணிவதையும், கிருமிநாசினிகளை பயன்படுத்துவதையும் திரையரங்க உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கு பிறகும் திரையரங்கம் சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.