கொல்கத்தா: பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவர்கள் உச்சநீதிமன்றம் மற்றும் மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று தங்களது வேலை நிறத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர். அதே வேளையில் தங்களது முக்கிய கோரிக்களை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த போராட்டம் முடிவுக்க வந்துள்ளது. நாளை (21ந்தேதி) முதல் பணிக்கு திருப்புவதாக அறிவித்து உள்ளனர்.
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எற்படுத்தியது. இதுதொடர்பாக நாடு முழுவதும் 24மணி நேர வேலை நிறுத்த போராட்டமும் நடைபெற்ற நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் மட்டும் டாக்டர்கள் போராட்டம் தொடர்ந்து வந்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடரந்து பல இடங்களில் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில்,
கொல்கத்தாவில், ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மட்டும் நீதி வேண்டி இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களை பேச்சுவார்த்தை மம்தா பல முறை அழைத்த நிலையில், இறுதியாக மத்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரி உள்பட சில அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இருந்தாலும் தங்களது முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என கூறி வந்தனர். இதனால், மருத்துவர்களின் போராட்டத்துக்கு காவல்துறை மூலம் மம்தா அரசு இடைஞ்சல் செய்து வந்தது. மருத்துவர்களின் போராட்ட பந்தல் மற்றும் தண்ணீர், காற்று வசதிகளுக்காக வைக்கப்பட்டிருந்தவைகளை அகற்றி நடவடிக்கை எடுத்தது. இதனால், மருத்துவர்கள் குடை பிடித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்த நிலையில் மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மேற்கு வங்க அரசு இறங்கி வந்துள்ள நிலையில், தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை மட்டும் வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் வரும் சனிக்கிழமை (செப்.21) முதல் அவசர சிகிச்சைகளுக்கான பணிக்கு திரும்புவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். எனினும் இப்போதைக்கு வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகளை தொடங்குவது குறித்த அறிவிப்பு எதையும் அவர்கள் வெளியிடவில்லை. தங்களது போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, 42 மருத்துவர்கள் திங்கள்கிழமை முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பிற அரசு அதிகாரிகளைச் சந்தித்து பேசினர். அப்போது, மருத்துவர்கள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற மம்தா அரசு ஒப்புக்கொண்டது.
அதன்படி, மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நோயாளிகள் நலக் குழுக்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ₹100 கோடியை அனுமதிக்க அரசு ஒப்புக்கொண்டது.
தலைமைச் செயலாளர் தலைமையில், போலீஸ் கமிஷனர் மற்றும் ஜூனியர் டாக்டர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட சிறப்புப் பணிக்குழுவும் அமைக்கப்படும்.
ம ருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் முழுவதும் குறை தீர்க்கும் பொறிமுறையையும் அரசாங்கம் அமைக்கும்
இந்த வழக்கை தவறாக கையாண்டதாகவும், சாட்சியங்களை சிதைத்ததாகவும் புகார் எழுந்துள்ளதால் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தினர். டிசி (வடக்கு) அபிஷேக் குப்தாவை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
மாநிலத்தில் உள்ள சுகாதார சேவைகள் இயக்குநர் (DHS) மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் (DME) ஆகியோரை தங்கள் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
வினீத் கோயலுக்குப் பதிலாக மனோஜ் குமார் வர்மாவை அரசு செவ்வாய்க்கிழமை நியமித்தது. அவர்கள் DC (வடக்கு) காவல்துறை, DHS மற்றும் DME ஆகியவற்றை தங்கள் பதவிகளில் இருந்து நீக்கினர்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளுக்கு இணங்க, மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் மருத்துவமனைகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு போன்ற புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
எவ்வாறாயினும், பணிக்குழு உருவாக்கம் மற்றும் குறைகளை தீர்ப்பதற்கான ஒரு விரிவான அமைப்பு இன்னும் செயல்படவில்லை.
போலீஸ் கமிஷனர் மற்றும் சுகாதார அதிகாரிகள் மாற்றப்பட்டதும் டாக்டர்கள் மகிழ்ச்சியடைந்தாலும், அனைத்து கோரிக்கைகளையும் அரசாங்கம் பின்பற்றுவதில் அவர்கள் சந்தேகம் கொண்டிருந்தனர். இதுகுறித்து கூறிய ஜூனியர் டாக்டர் அனிகேத் மஹாதா, அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்தைக் காட்டும் வரை, போராட்டங்கள் நிறுத்தப்படாது
“அரசு இந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டும், இதனால் நாங்கள் விரைவில் பணியைத் தொடர முடியும். உள்ளிருப்புப் போராட்டம் தொடரும்,” என்றார். மருத்துவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை ஓரளவு வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர், ஏனெனில் அவர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன, மேலும் மாநிலம் வெள்ளம் போன்ற சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளது, மருத்துவ கவனிப்பின் தேவையை அதிகரிக்கிறது. அதை கருத்தில்கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
புறநோயாளிகள் பிரிவில் (OPD) பணியாற்ற மாட்டோம், ஆனால் அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பங்கேற்போம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பயிற்சி மருத்துவர் பாலியல் படுகொலை: மம்தா அரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம் அறிக்கை அளிக்க உத்தரவு…