கொல்கத்தா: இளம்பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின்  பெற்றோர் மற்றும் சாட்சிகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் மேற்குவங்க மாநில முதல்வர்  மம்தா பானர்ஜி ஈடுபடுகிறார் என மேற்குவங்க வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள  பிரபல மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகபணியாற்றி வந்த 31 இளம் பெண் மருத்துவர் கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்காக வாதாடும் வழக்கறிஞர் பிகாஸ் ரஞ்சன் பட்டச்சார்யா என்பவர், மம்தா சாட்சிகளை விலைக்கு வாங்க முயற்சிப்பதாகவும், ஆனால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் பணம் வாங்க மறுத்துவிட்டர் என பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்காள முதல்வரின் இதுபோன்ற செயல்பாடு கண்டிக்கத்தக்கது. கற்பழிப்பு சம்பவம் நடக்கும்போதெல்லாம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை உடனடியாக சந்திக்க மம்தா பானர்ஜி விரும்புகிறார். அவர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. அதன்பின் எல்லாம் முடிந்தது எனச் சொல்கிறார்கள். இதுதான் மேற்குவங்கத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது என்று கூறியதுடன்,  கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேட் கார்டு நிர்ணயித்துள்ளார். இது துரதிருஷ்டவசமானது என்றார்.

தொடர்ந்து பேசியவர், தற்போது, பெண் டாக்டர் கொல்லப்பட்ட சம்பவத்திலும்,  சாட்சிகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர் பேசும்போது, தங்களிடமும் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது, அதை நாங்கள்  ஏற்க மறுத்துவிட்டதாகவு்ம,   “முதல்வர் மம்தா பானர்ஜி மீது எங்கள் முதலில்  நம்பிக்கை இருந்தது. ஆனால்,   தற்போது இந்த நம்பிக்கை போய்விட்டது. உடலை பார்த்தால் யாரும் இது கொலை வழக்கு என்றுதான் சொல்வார்கள். ஆனால், மருத்துவத்துறையில இருந்து, எங்களது மகள் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்ததாக மம்தா பானர்ஜி எங்களிடம் தெரிவித்தார் என்று கூறியதுடன்,   எங்களது மகள் உடல் அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டது. தகனம் செய்ய ஏற்கனவே  மூன்று உடல்கள் இருந்த நிலையில்,  முதலில் எங்களது மகள் உடல் அவசரமாக தகனம் செய்யப்பட்டது” எனத் தெரிவித்தனர்.

பெண் மருத்துவர் பாலியல் கொலை: தான் முதல்வராக உள்ள மாநிலத்தின் சட்டம் ஒழுங்குக்கு எதிராக பேரணி நடத்துகிறாராம் மம்தா…