கொல்கத்தா:

கொல்கத்தாவில் உள்ள பிரபலமான பெண்கள் கல்லூரி விண்ணப் படிவத்தில், மாணவிகளின் ஜாதி, மதம் தொடர்பான கட்டத்தில் மனித குலம் (ஹயுமானிட்டி) என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு உள்ளது. இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ளது பிரபலமான பெதுனே பெண்கள் கல்லூரி. ஆசியாவின் முதல் பெண்கள் கல்லூரியான இது1876ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அரசின் உதவி யுடன் நடைபெற்று வரும் நூறாண்டுகளை கடந்துள்ள பாரம்பரியமிக்க இந்த கல்லூரியின் முதல்வராக டாக்டர் மம்தா ரே சவுத்திரி இருந்து வருகிறார்.

இந்த கல்லூரியில் இந்த ஆண்டு விநியோகிக்கப்படும் விண்ணப்ப படிவங்களில், ஜாதி, மதம் குறித்த கேள்விக்கான கட்டத்தில் ‘மனித ஜாதி’  என குறிப்பிடும்  ஹியுமானிட்டி’ (‘Humanity’) என்ற வார்த்தையும் சேர்கக்ப்பட்டு உள்ளது. இது மாணவிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வளர்ந்து வரும் நவீன யுகத்திற்கேற்ப இன்றைய இளைய தலைமுறையினர் ஜாதி, மதம் போன்ற செயல்களில் ஆர்வம் காட்டுவதில்லை. ஜாதிய, மத ரீதியிலான நடைமுறைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கல்லூரி விண்ணப்ப படிவத்தில் ஜாதி, மதத்திற்கு பதிலாக மனித குலம் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள கல்லூரி முதவ்லர்,  “சில மாணவகிள்  தங்கள் மதம், ஜாதியை  வெளிப் படுத்த விரும்பவில்லை என்பதை நாங்கள் கவனித்தோம். அவர்களின் விருப்பங்களை நிறை வேற்றும் வகையில், மனிதஜாதி என்ற வார்த்தை சேர்க்கப்பட்டதாக கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரியின் முதன்மை தலைவரான மமதா ரே சவுத்ரி தெரிவித்து உள்ளார்.