கொளத்தூர்:
கொளத்தூர் தொகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. அதை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிறைவேற்றி தருவதாக ஸ்டாலின் கூறினார்.
stalin
ஸ்டாலின் இன்று காலை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட அயனாவரம் வசந்தம் கார்டன் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி,  அருகே உள்ள நூலகம் மற்றும் பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி மற்றும் அங்குள்ள நூலகத்திலும் திடீர் சோதனை மேற்கொண்டார்.
அவரிடம் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நூலக ஊழியர்கள் இங்கு சுத்தமான கழிப்பறை இல்லை. சுத்தமான குடிநீர் வசதி இல்லை. அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று புகார் கூறினர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
stalin-2
இதுகுறித்து மு.க.ஸ்டாலின்  கூறியதாவது:-
எனது தொகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகள் மற்றும் நூலகங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று புகார்கள் வந்தன. எனவே திடீர் சோதனை மேற்கொண்டேன்.
இங்குள்ள மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை தேவைகளை அரசு நிறை வேற்றவில்லை. எனவே எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உள்ளேன் என்றார்.
மேலும், , “சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டது தொடர்பாக கவர்னரை சந்தித்து முறையிடுவீர்களா?” என்று கேட்டபோது,  , “தேவைப்பட்டால் கவர்னரை சந்தித்து முறையிடுவோம்” என்றார்.