லண்டன்:
பேட்டி ஒன்றில் கேப்டன் விராட் கோஹ்லி அனுஷ்கா சர்மாதான் தனக்கு ஃபேவரைட் என தெரிவித்துள்ளார்.
விராட் கோஹ்லிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் காதல் என்பது ஊரறிந்த உண்மை.
ஆனால் இருவருமே எப்போதுமே அதைப்பற்றி எதுவும் சொல்வது கிடையாது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் இலைமறை காயாக இது பற்றி கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது :
மோஹாலியில் நான் 2016ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மேட்சில் விளையாடிக் கொண்டிருந்தேன்.
அப்போது அனுஷ்கா சர்மா என்னை பார்க்க வந்திருந்தார்.
நான் மிகவும் மனம் மகிழ்ந்தேன்.
அந்த சமயத்தில் கிரிக்கெட் போர்டில் இருந்து என்னை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கும் கேப்டனாக போட்டிருப்பதாக ஃபோன் செய்தி வந்தது.
தலைகால் புரியாத ஒரு மகிழ்ச்சி எனக்கு.
பக்கத்தில் இருந்த அனுஷ்காவிடம் இதை கண்ணீர் மல்க தெரிவித்தேன்.
அவரும் மகிழ்ச்சி அடந்தார்.
என் வாழ்க்கையின் அழகிய தருணங்களில் அதுவும் ஒன்று.
என்னால் என் ஆயுளில் என்றும் மறக்க முடியாதது.
முதன் முதல்லே டெஸ்ட் கேப்டனாக நான் 2016ல் மெல்போரினில் ஆடியபோதும் அனுஷ்கா என்னுடன் இருந்தார்.
என்னால் அதையும் மறக்க முடியாது.
அனுஷ்கா தான் என்றும் என்னுடைய வாழ்வின் ஸ்பெஷல்
இவ்வாறு உணர்ச்சி பொங்க கோஹ்லி தெரிவித்துள்ளார்.