சென்னை: கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உள்ள சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமின் கேட்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதி மன்றம், அவர்களை ஜாமீனில் விடுவிக்க மறுத்துவிட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவங்களில் முதல்வர் பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் வெளி யிட்டிருந்தார். அதில் பேசியிருந்த கொடநாடு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் இருந்த மனோஜ், சயான் ஆகியோர் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கை 3 மாதத்தற்கு விசாரித்து முடிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட நீதிமன்ற்ததிற்கு சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், சிறையில் உள்ள சயான், மனோஜ் ஆகியோர் தங்களை ஜாமினில்விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுமீதானவிசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றவாளிகள் இருவரும் ஏற்கனவே 4 சாட்சிகளை மிரட்டியுள்ளனர், இவர்களை ஜாமீனில் விடுவித்தால், மற்ற சாட்சிகளையும் மிரட்டக் கூடும் என்பதால், அவர்களை ஜாமினில் விடுவிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை துரிதமாக நடைபெற்று வருவதாகவும், மூன்று மாதத்தில் வழக்கு விசாரித்து முடிக்கப்பட உள்ள நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டியதற்கான அவசியம் ஏதுல்லை எனவும் வாதிடப்பட்டது.
இதையடுத்து, சயான், மனோஜ் இருவரையும் ஜாமீனில் விடுவிக்க மறுத்து அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.