கொடைக்கானல்

கொடைக்கானல் ஓட்டல் மற்றும் உல்லாச விடுதி உரிமையாளர்கள் இ பாஸ் முறையை ரத்து செய்யக் கோரி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்

வரும் 7 ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த உத்தரவுக்கு  கொடைக்கானல்வாசிகள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி கொடைக்கானல் ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அங்குள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

சங்க தலைவர் கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம்,

“தமிழகாரசு கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.  நீதிமன்ரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து தடை உத்தரவு பெற வேண்டும். இதுதொடர்பாக 6-ந்தேதி ஆட்சியரைரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். 

இது குறித்து சுமுக உடன்பாடு ஏற்படாவிட்டால் அனைத்து தங்கும் விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மாட்டோம். உணவு வழங்க மாட்டோம். அனைத்து சங்கங்களையும் கூட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். 

 காவல்டுறை சூப்பிரண்டிடம் கொடைக்கானலில் கூடுதல் காவலரை பாதுகாப்பு பணியில் நியமிக்கக்கோரி மனு கொடுக்க இருக்கிறோம்”

என்று தெரிவித்துள்ளார்.