கொச்சி

கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் எப்போது பரபரப்புடன் உள்ள எம் ஜி சாலை ஓசை இல்லா சாலை (NO HORN ROAD) ஆகி உள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள பெரு நகரங்களில் கொச்சியும் ஒன்றாகும். இந்த நகரில் எம் ஜி சாலை என அழைக்கப்படும் மகாத்மா காந்தி சாலை நகரின் மையப் பகுதியில் உள்ளது.   வாகனங்கள் அதிகம் செல்லும் இந்த சாலையில் அனைவரும் ஒலி எழுப்பியபடி செல்வது வழக்கம்.   இதனால் அந்த சாலையில் வசிப்போருக்கு மட்டுமின்றி அந்த வழியாக செல்வோருக்கும் கடும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது.

இதற்காக தற்போது கொச்சி மாநகர ஆணையர் இந்த சாலையை ஓசை இல்லா சாலை என நேற்று அறிவித்துள்ளார்.  உலக சாலை  அமைதி தினத்தை ஒட்டி நேற்று முதல் இந்த சாலை இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக கூரப்படுகிறது.   இந்த ஓசையில்லா சாலை குறித்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க ஒரு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியில்  கொச்சி மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் முகமது அனிஷ் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.   அப்போது அவர் மெட்ரோ ரெயில் கொச்சி நகரில் மாதவா பார்மசி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து மகாராஜா மெட்ரோ நிலையம் வரை ஒலி இல்லா பாதையாக அறிவித்தார்.   அத்துட்ன் மாணவ மாணவிகள்  இது குறித்த பதாகைகளை தாங்கிய வண்ணம் இந்த சாலையில் அணிவகுத்து நின்றனர்.