ஐபிஎல் 2020 தொடரில் பங்கேற்ற 8 அணிகளின் கேப்டன்களிலேயே, அதிக ரன்கள், அதிக விக்கெட் அல்லது அதிக ஆவரேஜ் என்ற ஏதேனுமொரு விஷயத்தில், முதலிடம் வந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர், பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மட்டுமே.
இவர், மொத்தமே 14 போட்டிகள் மட்டுமே ஆடியிருந்தாலும், 670 ரன்களை அடித்து, அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும், இத்தொடரில் அடிக்கப்பட்ட 5 சதங்களிலும் இவர் அடித்த 132 ரன்கள்தான் பெரிய சதமாகும்.
மற்றபடி, பெங்களூரு அணி கேப்டன் விராத் கோலியோ, ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னரோ, சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியோ, மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவோ, ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தோ, டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸோ அல்லது கொல்கத்தாவின் கேப்டன் இயான் மார்கனோ, இவர்கள் யாருமே, அதிக சிக்ஸர்கள், அதிக பவுண்டரிகள், அதிக சதங்கள், அரைசதங்கள், அதிக விக்கெட்டுகள் என எதிலும் முதலிடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டி-20 ஸ்பெஷலிஸ்ட் என்று புகழப்படும் கேஎல் ராகுல் மட்டுமே, இத்தொடரில் ஒரு கேப்டனாக சாதித்துள்ளார்.