மும்பை:
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக டி காக் 140 ரன்கள் அடித்தார்.
211 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணி, 208 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதோடு லக்னோ அணி 18 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் பெங்களூரு – குஜராத் அணிகள் மோத உள்ளன.