கிட்டி குமாரமங்கலம் வீட்டில் மஞ்சு என்ற பெண் வீட்டு வேலைகளை கவனித்து வந்தார். அவர் இரவில் கிட்டி குமாரமங்கலத்துடன் வீட்டிலேயே தங்கிக் கொள்வது வழக்கம். இந்த நிலையில், நேற்று அவரது வீட்டுக்கு வந்த, சலவை தொழிலாளி, வேலைக்கார பெண் மஞ்சு தாக்கி அறைக்குள் அடைத்து வைத்து விட்டு, கூட அழைத்து வந்த வாலிபர்களைக்கொண்டு, கிட்டி குமாரமங்கலத்தை அறைக்குள் இழுத்துச் சென்று கொள்ளையடிக்க முயன்றி செய்துள்ளனர். அப்போது கிட்டி சத்தம் போட்டதால், 3 பேரும் தலையணையால் அவரது முகத்தை அமுக்கினார்கள். இதில் மூச்சுத்திணறி கிட்டி அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்த பெட்டியை திறந்து நகை, பணங்களை கொள்ளையடித்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அறைக்குள் அடைபட்டு கிடந்த மஞ்சு தொடர்ந்து கூச்சலிட்டபடியே இருந்ததால், அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து விசாரித்தனர். தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், அவர்கள் விரைந்து வந்த பார்த்தபோது, கிட்டி குமாரமங்கலம் இறந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.அவரை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
வேலைக்கார பெண் மஞ்சு கொடுத்த தகவலையடுத்து இரவிலேயே கொலையாளி ராஜூலக்கானை போலீசார் கைது செய்தனர். அவனுடன் வந்த மற்ற 2 பேரும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விசாரணையில் கொலையாளிகள் யார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. தலைமறைவான 2 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் இணை கமிஷனர் இன்கித் பிரதாப்சிங் தெரிவித்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவரது மகன் குமாரமங்கலம் உடினயாக டெல்லி விரைந்தார். இதையடுத்து, கிட்டியின் உடன் மோகன் குமாரமங்கலத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து அவரது உடல் இன்று மாலை 6 மணி அளவில் டெல்லியில் உள்ள லோதி மயானத்தில் தகனம் செய்யப்படும் என தெரிவித்து உள்ளார்.
தனது தாயை பற்றி அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், எனக்குத் தெரிந்த மிகவும் சுயாதீனமான மற்றும் சக்திவாய்ந்த பெண் என் தாய் கிட்டி என்று புகழாரம் சூட்டியுள்ளார். எனக்கு நல்லது எது கெட்டது என கற்பித்தவர், நான் யார் என்பதை புரிய வைத்து என்னை வளர்த்தவர், என் வலியால் அவதிப்பட்டவர், என் மகிழ்ச்சிக்காக சத்தமாக சிரித்தவர், நிபந்தனையின்றி என்னை நேசித்தவர், இன்று என்னை விட்டு பிரிந்து விட்டார். என்னை பெற்றெடுத்தவர் இன்றைய தேதியில் என்னை விட்டு விட்டார் என்று வருத்தமுடன் தெரிவித்து உள்ளார்.